தடையிலிருந்து விடுதலைபெற்ற ரீமா கல்லிங்கல்

தடையிலிருந்து விடுதலைபெற்ற ரீமா கல்லிங்கல்

செய்திகள் 25-Apr-2013 9:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மலையாள நடிகர் நடிகைகள் டிவி நிகழ்ச்சிகளில் காம்பியராக பணியாற்றக்கூடாது என்ற தடை உத்தரவை கேரள ஃபிலிம் சேம்பர் பிறப்பித்திருந்தது. ஆனால், இதையும்மீறி ஒரு டிவி நிகழ்ச்சியில் பணியாற்றியதற்காக நடிகை ரீமா கல்லிங்கலுக்கு (தமிழில் பரத்துடன் ‘யுவன் யுவதி’ படத்தில் நடித்தவர்) கடந்த மார்ச் மாதம் கேரள ஃபிலிம் சேம்பர் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸிற்கு எவ்வித பதிலும் அளிக்காததால், மே 15-ற்குப் பிறகு நடிகை ரீமா கல்லிங்கல் நடித்த எந்தப் படத்தையும் வெளியிடவோ, வேறு புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவோ கூடாது என தடை உத்தரவைப் பிறப்பித்தது. இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட நடிகை ரீமா கல்லிங்கல், ஃபிலிம் சேம்பருக்கு பலமுறை சென்று தன்னிலை விளக்கம் கொடுத்தபிறகு, மனமிறங்கிய ஃபிலிம் சேம்பர் ரீமா கல்லிங்கலின் தடை உத்தரவை தற்போது விலக்கியிருக்கிறது. இத்தனைக்கும் மலையாளத்தைப் பொறுத்தவரை ரீமா கல்லிங்கல் மாநில அரசின் விருது பெற்ற ஒரு முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;