ஜூனியர் என்.டி.ஆரின் ராமய்யா வஸ்தவய்யா

ஜூனியர் என்.டி.ஆரின் ராமய்யா வஸ்தவய்யா

செய்திகள் 24-Apr-2013 4:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு படத்திற்கு வைக்கும் தலைப்பு கூட அந்த படத்தின் வெற்றிக்கு முன்னோட்டமாக அமையும். ஜூனியர் என்.டி.ஆர்.நடிக்க, ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் ஒன்று உருவாக இருக்கும் செய்தி சமீபத்தில் வெளியாகி தெலுங்கு பட ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்நிலையில் அந்தப் படத்திற்கு 'ராமய்யா வஸ்தவய்யா' என பெயர் வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளனர். பிரபல ஹிந்திப் படமான 'ஸ்ரீ 420' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரிதான் 'ராமய்யா வாஸ்தவய்யா'. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். முழுநீள ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;