வெள்ளிக்கிழமை முதல் ஷேடோ

வெள்ளிக்கிழமை முதல் ஷேடோ

செய்திகள் 24-Apr-2013 3:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'மெஹர்' படப் புகழ் ரமேஷ் இயக்கத்தில், 'விக்டரி ஸ்டார்' வெங்கடேஷ் - டாப்ஸி நடித்திருக்கும் 'ஷேடோ' தெலுங்கு படம் வருகிற 26-ம் தேதி, வெள்ளிக் கிழமை வெளியாகிறது. தெலுங்கு பட ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது தெலுங்கில் தயாரான முதல் 'ஆரோ 11.1.3டி' தொழில்நுட்பம் கொண்ட படம் இது என்பது! கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' இந்தத் தொழில்நுட்பத்தில் தயாராகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 'ஷேடோ' படத்தை 'யுனைடெட் மூவீஸ்' நிறுவனம் சார்பில் பர்ச்சூரி கிரீத்தி தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;