கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கும் தயாரிப்பாளர்கள்

கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கும் தயாரிப்பாளர்கள்

செய்திகள் 24-Apr-2013 3:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

டோலிவுட் நடிகர் நித்தின் நடித்த 'இஷ்க்' படத்தைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குண்டே ஜாரி கல்லந்தாயிந்தே' என்ற தெலுங்கு படமும் நல்ல வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் அமெரிக்காவில் வெளியாகிய முதல் வாரத்திலேயே 90 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் கணக்குபடி, நித்தின் நடித்த படங்களிலேயே இப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை குவிக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நித்தினை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர் வீட்டிற்கு சென்று அவரை முற்றுகையிட, நித்தின் சம்பளமும் கணிசமாக உயர்த்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;