'சின்னப் படங்களுக்கு தனியாக தியேட்டர்கள் வேண்டும்'’ - முதல்வருக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள்

'சின்னப் படங்களுக்கு தனியாக தியேட்டர்கள் வேண்டும்'’ - முதல்வருக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள்

செய்திகள் 24-Apr-2013 1:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சும்மா நச்சுன்னு இருக்கு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று காலை சென்னை சிட்டி சென்டர் ஐநாக்ஸ் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அபிராமி ராமநாதன், நடிகர்கள் தமன், கௌதம் கார்த்திக், நகுல், தம்பி ராமையா, பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ்குமார், தமன், தரண்குமார், இயக்குனர்கள் டி.ராஜேந்தர், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய திரையுலக உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்...‘‘சமீபகாலமாக ஒவ்வொரு வாரமும் அதிக எண்ணிக்கையில் படங்கள் ரிலீஸாகின்றன. இதை முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இங்கிருக்கும் எஸ்.ஏ.சி உள்ளிட்டவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து மேடையேறிய டி.ராஜேந்தர் ‘‘சின்னப்படங்களுக்கும், பெரிய படங்களுக்கும் தனித்தனியாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் சின்னப் படங்களை வெளியிடும் தியேட்டர்கள் தங்கள் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும். இந்த சமயத்தில் முதல்வருக்கும் இதனை வேண்டுகோளாக வைக்கிறேன்’’ என்றார்.

விழாவின் நிறைவாக ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ திரைப்படத்தின் டிரைலரை கௌதம் கார்த்திக் மற்றும் சினேகா பிரிட்டோ வெளியிட்டார்கள். படத்தின் இசைத்தகடு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;