மே 15ல் துவங்குகிறது... 'பாண்டியநாடு'

மே 15ல் துவங்குகிறது... 'பாண்டியநாடு'

செய்திகள் 24-Apr-2013 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் விஷால் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவக்கி, முதல் முறையாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்... 'விஷால் ஃபிலிம் பேக்டரி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் மூலமாக அவர் தயாரிக்கும் முதல் படம், 'பாண்டியநாடு'. இதில் அவரே நாயகனாக நடிக்க, சுசீந்திரன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்க, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பவர் மதி. தவிர, சுசீந்திரனின் ஆஸ்தான வசனகர்த்தாவான எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் மற்றும் முக்கிய வேடங்களில் சூரி, விக்ராந்த், வைரவன், 'ஆரண்ய காண்டம்' சோம சுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 15 முதல் துவங்கி, மதுரை, நெல்லை, குன்னூர் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகப் படமாகவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;