நிறைய கட் வாங்கிய ஷூட் அட் வடாலா!

நிறைய கட் வாங்கிய ஷூட் அட் வடாலா!

செய்திகள் 24-Apr-2013 2:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏக்தா கபூர் தயாரிப்பில், ஜான் ஆப்ரகாம், அனில் கபூர், துஷார் கபூர், மனோஜ் பாஜ்பாய், சோனு சூட், கங்கணா ரணாவத் என பல பாலிவுட் பிரபலங்கள் நடித்திருக்கும் ஷூட் அட் வடாலா ஹிந்தித் திரைப்படம் மே 3-ம் தேதி ரிலீஸாகிறது. டோங்கிரி டு துபாய் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை, மும்பையில் பதிவான முதல் (1982-ல்) என்கவுண்டர் பற்றியது. சஞ்சய் குப்தா இயக்கத்தில், க்ரைம் த்ரில்லர் ஸ்டோரியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பிரபல தாதா தாவூத் இப்ராகிம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் இடம் பெற்றிருக்க, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்துக்கு நிறைய கட் கொடுத்து ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;