மே 1-ல் சூது கவ்வும்

மே 1-ல் சூது கவ்வும்

செய்திகள் 23-Apr-2013 6:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் புதுமுக இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கியுள்ள சூது கவ்வும் படம் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் இப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திலுள்ள எந்த காட்சியையும் நீக்காமல் u/a சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். வசந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மூன்று பேர் மூன்று காதல் மற்றும் தனுஷ் தயாரிப்பில், ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள எதிர்நீச்சல் ஆகிய படங்களும் மே 1-ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;