தனுஷின் ரான்ஜ்னா டிரைலர் வெளியீடு!

தனுஷின் ரான்ஜ்னா டிரைலர் வெளியீடு!

செய்திகள் 22-Apr-2013 6:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பரத்பாலா இயக்ததில் தனுஷ் நடித்திருக்கும் மரியான் தமிழ்த் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தனுஷ் முதன் முதலாக நடித்திருக்கும் ஹிந்தி படமான ரான்ஜனா ஜூன் 28-ம் தேதி ரிலீஸாகிறது. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் அபய் தியோல் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை ஏப்ரல் 24-ம் தேதி மத்தியம் 12 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நடிகரும், ஒளிப்பதிவாளருமான நடராஜன் சுப்ரமணியன் ஒளிப்பதிவு தெய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;