ரிலீஸ் தள்ளிப் போன ஷேடோ

ரிலீஸ் தள்ளிப் போன ஷேடோ

செய்திகள் 20-Apr-2013 12:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோடை விடுமுறையை முன்னிட்டு தெலுங்கில் பெரிய நட்சத்திரங்கள் நடித்த பல படங்கள் வரிசையாக ரிலீஸாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வெங்கடேஷ், டாப்ஸி, ஸ்ரீகாந்த், மதுரிமா முதலானோர் நடித்திருக்கும் ஷேடோ என்ற படம் ஏப்ரல் 26-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இப்படம் அறிவித்தபடி 26-ம் தேதி வெளி வராது. இன்னும் சில நாட்கள் தாமதமாக ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு ஹி/கி சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். பில்லா, மெஹ்ர் போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்ற மெஹர் ரமேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தினை யுனைடெட் ஸ்கொயர் மூவீஸ் சார்பில் பர்ச்சூரி கீர்த்தி தயாரித்திருக்கிறார். தமன் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;