விஜய் சேதுபதி - கிருஷ்ணா இணையும் படம்!

விஜய் சேதுபதி - கிருஷ்ணா இணையும் படம்!

செய்திகள் 20-Apr-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எல்லா மொழிகளிலும், ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது இப்போதைய டிரெண்ட். அந்த வரிசையில் தமிழில் பிரபல தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதியும், கழுகு புகழ் கிருஷ்ணாவும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெய்கிருஷ்ணா இயக்குகிறார். இவர் கமல்ஹாசன், கலைமணி போன்ற பிரபலங்களிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி இப்போது சூது கவ்வும், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, கிருஷ்ணாவுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;