குற்றாலம் புரொமோஷன் பாடல்!

குற்றாலம் புரொமோஷன் பாடல்!

செய்திகள் 20-Apr-2013 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

திரைப்படம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் இன்று இணையதளங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. டீஸர், ட்ரைலர், பாடல்கள் என்று வரும் விளம்பரங்கள் அந்த படங்களின் வெற்றிக்கு ரொம்பவும் உதவுகின்றன. அந்த வகையில் குற்றாலம் பட தயாரிப்பாளர்கள் படத்தின் விளம்பரத்துக்காக காதலை கண்டு புடிச்சவன் யாரு.. என்று துவங்கும் ஒரு புரொமோஷன் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். விரைவில் யுட்யூப் போன்ற இணையதளங்களில் இதனை ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இப்பாடல், ஸ்டீஃபன் ராயல் இசையமைப்பில் வித்தியாசமான முறையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;