சூர்யா - கார்த்தி 1 கோடி ரூபாய் நன்கொடை!

சூர்யா - கார்த்தி 1 கோடி ரூபாய் நன்கொடை!

செய்திகள் 20-Apr-2013 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன், இந்திய திரைப்பட சம்மேளனமும் இணைந்து சென்ன¬யில் மாபெரும் விழாவினை நடத்த இருக்கிறது. இந்த விழா சம்பந்தமாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் (ஃபிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் கூறும்போது, இந்திய சினிமாவுக்கு இது நூறாவது ஆண்டு. இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்கு உண்டு. தென்னிந்திய சினிமாவின் தாய்வீடு சென்னை. அந்த சென்னையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவில் கொள்ளும் விதமாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம். அதன்படி வருகிற ஜூலை மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழி கலைஞர்கள் பங்கேற்பதோடு, நான்கு மொழியைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்படவும் உள்ளனர். இதற்காக மொழி வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இ¢ந்த விழாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்ற மூன்று மாநில முதலமைச்சர்கள் ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்திருக்கிறோம். இந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். இந்த நன்கொடை சம்பந்தமான விஷயங்களில் தங்களது அப்பா சிவகுமார், அம்மா லட்சுமி ஆகியோரது பெயர்களை குறிப்பிடும்படி இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;