சூர்யாவை சந்திக்க வேண்டுமா?

சூர்யாவை சந்திக்க வேண்டுமா?

செய்திகள் 20-Apr-2013 12:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். சூர்யாவை நேரில் சந்திக்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்று நிறைய ரசிகர்ளுக்கு ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு சிங்கம் 2 படப்பிடிப்பில் சூர்யாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை பெற்றுத்தர, படத்தின் தயாரிப்பாளர்கள் அதற்கென்றே ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். www.singam2.in என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த இணையதளம் மூலம் ரசிகர்கள் சூர்யாவை சந்திக்கும் வாய்ப்பினை பெறலாம். சிங்கம் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஹரி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;