மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்!

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்!

செய்திகள் 18-Apr-2013 2:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்பட்ட விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த பெரும்பாலான திரைப்படப் பாடல்கள் சகாவரம் பெற்றவை. இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 700 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அதன் பிறகு 1965-ம் ஆண்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக இசையமைக்கத் துவங்கினர். ஆனால் எம்.எஸ்.வி. அடைந்த வெற்றியை ராமமூர்த்தியால் அடைய முடியவில்லை. இப்படி பிரிந்து இசையமைத்து வந்த இருவரும் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்திற்கு இசை அமைத்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நட்பை பாராட்டி வந்தனர். கடந்த ஆண்டு ஜெயா டிவி, இவர்களை கௌரவிப்பதற்காக விழா எடுத்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, இருவரையும் வெகுவாக பாராட்டிப் பேசியதோடு இருவருக்கும் கார் மற்றும் தங்கக் காசுகளை பரிசாக அளித்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;