கலக்கல் காமெடியில் யாருடா மகேஷ்

கலக்கல் காமெடியில் யாருடா மகேஷ்

செய்திகள் 18-Apr-2013 1:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

காமெடி படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற பல படங்கள். இந்த வரிசையில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் மதன்குமார் இயக்கியுள்ள யாருடா மகேஷ். சந்தீப் கிருஷ்ணா, டிம்பிள் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீஸர் யுட்யூபில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கலக்கல் காமெடி காட்சிகள் நிறைந்த இப்படத்தை அன்பு பிக்சர்ஸ் சார்பில் ஜெ.அன்பழகன் வருகிற 26-ம் தேதி வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;