கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் மோகன்லால்!

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் மோகன்லால்!

செய்திகள் 17-Apr-2013 11:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கௌதம் வாசுதேவ மேனன் மலையாளத்தில் முதன் முதலாக ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தை மலையாள திரைப்பட உலகில் பிரபலமான ஷாகுல் மரைக்கார் தயாரிக்கிறார். இந்தப் படம் தவிர பிரபல இயக்குனர் பாசிலின் மகன் ஃப்ஹத் பாசில் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவும் திட்டமிடடிருக்கிறார் ஷாகுல் மரைக்கார். தமிழில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி முடித்த பிறகுதான் மோகன்லால் நடிக்கும் மலையாள படத்தை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;