மோகன்பாபுவின் மல்டிஸ்டார் படம்!

மோகன்பாபுவின் மல்டிஸ்டார் படம்!

செய்திகள் 17-Apr-2013 11:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலமாக டோலிவுட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் நடித்த படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படம். அடுத்து, நடிகர் மோகன்பாபுவும் மல்டிஸ்டார் படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்தில் மோகன்பாபுவுடன் அவரது மகன்களான விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு மற்றும் வருண் சந்தேஷ், தனிஷ், ஹன்சிகா மோத்வானி, ப்ரணிதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மாறுபட்ட ஒரு வேடத்தில் பாலிவுட் நடிகை ரவீணா டான்டனும் நடிக்கிறரார். இப்படத்தை லக்ஷ்யம் படப் புகஷ் ஸ்ரீவாஸ் இயக்க, 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் துவக்க விழா ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;