தென்னிந்தியாவில் ஆரம்பித்து தென் ஆப்ரிக்காவில் முடியும் சிங்கம் 2

தென்னிந்தியாவில் ஆரம்பித்து தென் ஆப்ரிக்காவில் முடியும் சிங்கம் 2

செய்திகள் 17-Apr-2013 11:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி கூட்டணியில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிப் பெற்ற சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் சிஙகம் 2 தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன், அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம், நாசர், ராதாரவி, விஜயகுமார், முகேஷ் ரிஷி, மனோரமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிங்கம் 2 குறித்து இயக்குனர் ஹரி குறிப்பிடும்போது, இப்படத்தின் கதை தென்னிந்தியாவில் ஆரம்பித்து, க்ளைமாக்ஸ் தென் ஆப்ரிக்காவில் நடக்கிற மாதிரி இருக்கும். இதில் தமிழக போலீஸுடன் ஆந்திரா, கேரளா போலீஸுக்கும் முக்கியத்துவம் இருக்கிற மாதிரி காட்சிகள் அமைந்திருக்கிறது. இந்தப் படம் இந்திய போலீஸின் திறமையையும், வலிமையையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருக்கும் என்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடி, மற்றும் தமிழகத்தில் ஜனநடமாட்டம் அதிகமுள்ள பல இடங்களில் நத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

க்ரிஷ் 3 டிரைலர்


;