மிகப்பெரிய கவுரவம்...! - நடிகை வித்யாபாலன்

மிகப்பெரிய கவுரவம்...! - நடிகை வித்யாபாலன்

செய்திகள் 13-Mar-2013 2:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை வித்யாபாலன்... வருகிற மே மாதம் முதல் ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது 'இந்தியத் திரைப்பட விழா'. இவ்விழாவில், இந்திய சினிமாவின் முதல் படமான, 'ராஜா ஹரிச்சந்திரா' உள்பட, நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யாபாலன் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது!. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், 'இது எனக்கு மிகப்பெரிய கவுரவம். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் ஆயுட்கால தூதுவராக ஒப்பந்தம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;