'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய நந்தினி

'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய நந்தினி

செய்திகள் 12-Mar-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய நந்தினி, சிறிய இடைவெளிக்குப்பிறகு இயக்கவிருக்கும் படம், 'கொலை நோக்குப் பார்வை'. 'பொய் சொல்லப்போறோம்', ' நினைத்தாலே இனிக்கும்', 'யாரடி நீ மோகினி' உட்பட பல படங்களில் நடித்துள்ள கார்த்திக் குமார், இதில் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் ராதிகா ஆப்தே. ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை துப்பறியும் கதையாக உருவாகிறதாம் இப்படம். முக்கியமான கேரக்டரில் ஜெகன் நடிக்கிறார். மற்ற நடிகர் மற்றும் நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

'ஈரம்' அறிவழகனின் உதவியாளரான மணிகண்டன், இயக்குனராக அறிமுகமாகும் படம் '1 + 1 = 3'. வித்தியாசமான தலைப்பிலேயே கவனம் பெற்றுள்ள இப்படத்தின், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில், ரவீந்திரன் சந்திரசேகர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;